Kollywood News

  • Home/
  • Cine News/
  • saaho தெலுங்கு படத்தை முடித்த அருண் விஜய்:

saaho தெலுங்கு படத்தை முடித்த அருண் விஜய்:

பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ''சஹோ'' படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். 

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆக்ஷன் படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவுள்ளது. 

share