Kollywood News

  • Home/
  • Cine News/
  • குத்துச்சண்டை வீரராக அருண் விஜய்

குத்துச்சண்டை வீரராக அருண் விஜய்

குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பாக்ஸர்’ என்று பெயரிட்டுள்ளனர். பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெறுகிறார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார். அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Read More about :

share