Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஹிந்தியில் ரீமேக்காகும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்- எந்த ஹீரோ நடிக்கிறார் தெரியுமா?

ஹிந்தியில் ரீமேக்காகும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்- எந்த ஹீரோ நடிக்கிறார் தெரியுமா?

மகிழ் திருமேணி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் தடம். இதுவரை வந்த படங்களில் தமிழில் அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது.

இந்த விஷயத்தை டுவிட்டரில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் அருண் விஜய். தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக தகவல் வந்துள்ளது. Murad Ketani மற்றும் Ashwin Warde ஆகியோர் தான் படத்தை வாங்கியுள்ளார்களாம்.

அருண் விஜய் வேடத்தில் பாலிவுட்டின் டாப் ஹீரோ ஷாகித் கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share