Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி

சூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி

இயக்குனர் விஜய் இயக்கிய 'வனமகள்' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை சாயிஷா தற்போது ஆர்யாவுடன் 'கஜினிகாந்த், கார்த்தியுடன் 'கடைகுட்டி சிங்கம்' மற்றும் விஜய்சேதுபதியுடன் 'ஜூங்கா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் வெளியானவுடன் அவர் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவுள்ள கே.வி.ஆனந்த் படத்தில் சாயிஷா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமாகியிருப்பதாக நடிகை சாயிஷா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் அல்லுசிரிஷ் ஆகியோர்களுடன் நடிக்கவுள்ளது குறித்து தனது மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் நடைபெறவுள்ளது.

Source : Indiaglitz

Read More about :

share