Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஐபிஎல் சிஸ்கே vs கேகேஆர் போட்டியின் போது 'தளபதி63' படம் குறித்து ஷாருக்கானிடம் அட்லி பேச்சுவார்த்தை:

ஐபிஎல் சிஸ்கே vs கேகேஆர் போட்டியின் போது 'தளபதி63' படம் குறித்து ஷாருக்கானிடம் அட்லி பேச்சுவார்த்தை:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். 

அப்போது, அவருடன் இயக்குநர் அட்லி மற்றும் அவருடைய மனைவி பிரியா இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். 

தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வரும் 'தளபதி 63' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. எனினும் இது தயாரிப்பாளர் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தளபதி 63 படத்தில் நடிப்பது குறித்து ஷாருக்கான் - அட்லி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது படம் குறித்த தவகல்களை ஷாருக்கான் கேட்டு கொண்டதாவும் தெரிகிறது.

share