ரசிகனாக சொல்கிறேன் ‘விஜய் 61’ வேற லெவல் படம் - இயக்குனர் அட்லீ!‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. தற்போதைக்கு ‘விஜய் 61′ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான், ஐரோப்பிய நாடுகள் என இடைவெளியின்றி நடந்து வந்தது.

அதனை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புடன் அனைத்து கட்ட
படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர். இந்த நிலையில் ‘விஜய் 61′ படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.
சமீபத்தில் பிரபல இணையத்தளம் ஒன்று விருது விழா ஒன்றை நடத்தியது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கும், சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கும் கிடைத்தது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அட்லீ, “’விஜய் 61′ படம் இளைய தளபதியின் வேற லெவல் படம். இதை நான் ஒரு இயக்குநராக கூறவில்லை. விஜய் ரசிகர்களில் ஒருவனாக கூறுகிறேன்” என்றார்.

share