Kollywood News

  • Home/
  • Cine News/
  • பலூன் தோல்வி.... குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள ஜெய்!

பலூன் தோல்வி.... குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள ஜெய்!



சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் ‘பலூன்’. இயக்குனரி சிரீஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஜெய் மீது சரமாரி புகார்களை கூறியது. 

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் ஜெய் இன்று தனது பதிலை கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ‘ என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே இதனை பார்க்க முடிகிறது. 

சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு நான் வந்துள்ளேன். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என்னை வைத்து படம் தயாரித்த அனைவருக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இதுவரை எந்த தயாரிப்பாளரும் என்மீது புகார் கூறியதில்லை. பலூன் திரைப்படம் இதுவரை ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. எனவே இந்த படம் வசூல் ரீதியில் வெற்றிப்படம் தான்.’ என்று கூறியுள்ளார். 

Read More about :

share