Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும்- பலூன் இயக்குனர் வேண்டுகோள்!

நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும்- பலூன் இயக்குனர் வேண்டுகோள்!



70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. 

நான் இந்த படத்துக்குள் வர முக்கிய காரணம் சினிஷ் தான். போஸ்டர், டீசர்னு ஒவ்வொரு விஷயமும் நல்ல வரவேற்பை பெற்றது. பலூன் படத்துக்கு முந்தைய வாரம் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் எங்கள் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். ரிலீஸுக்கு முன்பே பலூன் படத்தின் எல்லா ஏரியாவும் விற்பனை ஆகி விட்டது என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ். 

படத்தின் இயக்குனர் சினிஷ் பேசும்போது, ‘ வேட்டை மன்னன் படத்தில் உதவியாளராக வேலை செய்தேன். பின் ஒரு குறும்படம் எடுத்து அதுவும் சொதப்ப, அடுத்து ஒரு கதையோடு தயாரிப்பாளரை தேடி அலைந்தேன். ஞானவேல்ராஜா ஒரு பேய் கதை வேணும்னு கேட்க 30, 40 ஆங்கில படங்களை பார்த்து, ஒரு கதை ரெடி பண்ணி விட்டேன். நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன். 

பாதி கதை ரெடியான நேரத்தில் கதையை கேட்ட திலீப் சுப்பராயன் படத்துக்கு ஹீரோ, தயாரிப்பாளர்கள் கிடைக்க உதவியாய் இருந்தார். நிறைய பிரச்சினைகள் வந்தன, அதையும் தாண்டி படம் வளர்ந்தது. எனக்கு  பாஸிடிவாக கூடவே இருந்தார் ஆரா சினிமாஸ் மகேஷ். நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அதற்கு நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும், படத்தை ஓட வைக்க எல்லா வகையிலும் விளம்பரப்படுத்துவதில் தவறில்லை என்றார் இயக்குனர் சினிஷ். 

படத்தின் நாயகி அஞ்சலி, கலை இயக்குனர் சக்தி, பேபி மோனிகா, மாஸ்டர் ரிஷி, நடிகர் கார்த்திக் யோகி, தயாரிப்பாளர் அருண் பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

share