Kollywood News

  • Home/
  • Cine News/
  • விபத்தில் சிக்கிய இளம் நடிகர், நடிகை, இயக்குனர் - கோர சம்பவம்

விபத்தில் சிக்கிய இளம் நடிகர், நடிகை, இயக்குனர் - கோர சம்பவம்

சினிமா பிரபலங்கள் விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சைகளில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் இப்படியான சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் பட பிரபலம் நடிகர் சுதாகர் மங்களகிரி மண்டல் பகுதியில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Nuvvu Thopu Raa பட விளம்பரத்திற்காக குண்டூரில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் சென்றவர் டேங்கர் லாரியை முந்தி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது கார் வேகமாக சென்றதில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த சாலை பணியாளர் பெண் மீது மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

மேலும் காரில் இருந்த நடிகர் சுதாகர் இயக்குனர் ஹரிநாத், ஹீரோயின் நித்யா ஷெட்டி ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர் கூறுகையில் டிரைவர் லாரியை முந்தும் போது அப்பெண் குறுக்கே வந்துவிட்டார். கார் அந்த பெண் மீது மோதும் என நினைக்கவில்லை. பலத்த காயத்தால் அப்பெண் அங்கேயே உயிரிழந்துவிட்டார். சுதாகர் காரை ஓட்டியதாக வந்த செய்தி வெறும் வதந்தி என கூறியுள்ளார்.

Read More about :

share