கமல்ஹாசன்
தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட அனைவருமே தற்போது
திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று
முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ்
நிகழ்ச்சி நடந்தபோதே நண்பர்களாக இருந்த ஹரிஷ் கல்யாண்
மற்றும் ரைசா இணைந்து ஒரு
படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும்
அந்த படத்திற்கு 'பியார் பிரேமா காதல்'
என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் இளமையான திரைக்கதையை கேள்விப்பட்ட ஒரு பாலிவுட் தயாரிப்பாளர் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றாராம். இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி 2' படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷ்ன்ஸ் ராஜராஜன் மற்றும் இசையமைப்பாளர் யுவ ன் ஷங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது.
Source : Indiaglitz