Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரூ. 1000 கோடி பட்ஜெட் படம் கைவிடப்பட்டதா?- ரசிகர்கள் வருத்தம்

ரூ. 1000 கோடி பட்ஜெட் படம் கைவிடப்பட்டதா?- ரசிகர்கள் வருத்தம்

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் ரஜினியின் 2.0. அந்த படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாக ரூ. 1000 கோடியில் மகாபாரதம் தொடங்க இருந்தது.

பீமனின் பார்வையில் மகாபாரதத்தை சொல்லும் இந்த படம் ரண்டமூழம் என்ற நாவலை மையமாக கொண்டு தயாராக மோகன்லால் முக்கிய ரோலில் நடிக்க இருந்தார்.

இப்படத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்டில், யு.ஏ.இ. எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி. ஹெல்த்கேர் என்னும் நிறுவனத்தின் நிறுவனர் ரகுராம் ஷெட்டி தயாரிப்பதாக இருந்தார்.

ஆனால் தற்போது ரண்டமூழம் நாவலை எழுதிய வாசுதேவன் அவர்களுக்கும் இந்த படத்தை இயக்க இருந்த ஸ்ரீகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களும் சோகத்தில் இருக்கிறார்கள் மேலும் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் நாவல் படமாக தயாராகி வருகிறது என்ற தகவல் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

Read More about :

share