Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா

கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சினிமாவில் பிசியாக்கிவிட்டது. ஓவியா முதல் ஜூலி வரை அனைவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜாவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சுஜா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த உடை குறித்து ஒருசில நெட்டிசன்கள் ஆபாசமான கமெண்ட்டுக்களை பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு சுஜா தனது சமூக வலைத்தளத்தில் சாட்டையடி பதிலை கொடுத்துள்ளார்.

நான் ஒரு நடிகை தான். என்னுடைய சாப்பாட்டை நான் உழைத்து பெருமையாக சாப்பிடுகிறேன். சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் என் உடை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது நான் தான். அது என் விருப்பம். என் உடை உங்களுக்கு என்ன பிரச்சனை தருகிறது. என் உடைதான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமா?

நடிகைகளும், அவர்களது உடைகளும் பிரச்சனை இல்லை. பிரச்சனை உங்களிடம் தான் இருக்கின்றது. இண்டர்நெட் என்னும் மிகப்பெரிய உலகில் நீங்கள் ஆபாச கமெண்ட் அடித்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். நிச்சயம் நீங்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சுஜாவருணி தெரிவித்துள்ளார்.

Source : Indiaglitz

Read More about :

share