Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி மாற்றம்

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி மாற்றம்

'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே நாளில் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படமும் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் 'விஸ்வரூபம் 2' படம் ரிலீஸாகி ஒருவாரம் கழித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சோலோவாக சுதந்திரதின விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Read More about :

share