Kollywood News

  • Home/
  • Cine News/
  • சினிமா துறை என்பது வர்த்தகம்: விஜய்சேதுபதி

சினிமா துறை என்பது வர்த்தகம்: விஜய்சேதுபதி

சென்னை : நடிகர் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி தயாரித்துள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கி உள்ளார். இளையராஜா இசை. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் சென்னையில் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது விஜய்சேதுபதி கூறியதாவது: இயக்குனர் லெனின் பாரதி உதவி இயக்குனராக பணியாற்றியபோது நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன்.

அப்போது முதலே அவரை எனக்குதெரியும். அவரது நல்ல குணம், யாரைப் பற்றியும் குறை சொல்லாத பண்பு என்னை கவர்ந்தது. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது மேற்கு தொடர்ச்சி மலை கதையை என்னிடம் கூறினார். அப்போது எனக்கு ரூ. 25 லட்சம்தான் சம்பளம். அதனால் அப்படத்தை என்னால் தயாரிக்க முடியாத நிலை இருந்தது. எனக்காக காத்திருந்தார்.

படம் தயாரிக்கும் நிலைக்கு உயர பல ஆண்டுகள் ஆனது.  தற்போதுதான் படம் உருவாகி திரைக்கு வந்திருக்கிறது. எல்லா தரப்பினரிடமும் படம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் முதலில் இப்படத்தை பார்த்தபோது எனக்கு பிடிக்கவில்லை. என்னால் கலையின் விஸ்வரூப வடிவத்தை புரிந்துகொள்ள முடியாததே இதற்கு காரணம்.

எல்லோருமே நல்ல வார்த்தைகளில் இப்படத்தை பாராட்டி விமர்சனம் செய்யும்போது என்னை செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.  என் குழப்பத்துக்கும் விடை கிடைத்தது. இப்போது நான் என்னை மாற்றிக்கொண்டேன். சினிமா என்பது முழுக்க வர்த்தகம்தான். இல்லாவிட்டால் படத்தை வாங்கவோ, வெளியிடவோ யாரும் முன்வரமாட்டார்கள். இப்போதுகூட மேற்கு தொடர்ச்சிமலைக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இனி கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

share