Kollywood News

  • Home/
  • Cine News/
  • அப்பாவை இழந்த பெண்ணுக்கு பிரபல காமெடி நடிகர் கொடுத்த பரிசு

அப்பாவை இழந்த பெண்ணுக்கு பிரபல காமெடி நடிகர் கொடுத்த பரிசு

தமிழர்களுக்கு உலகளாவிய நிலையில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது. பலரும் சாதித்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் விளையாட்டில் சாதித்து வருகிறார்கள்.

அண்மையில் ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்த்த இளம் பெண் கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த மாணவியின் சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது பிரபல நடிகர் ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் பரிசு தொகையை கோமதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அவரை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Read More about :

share