Kollywood News

  • Home/
  • Cine News/
  • தர்பாரில் ரஜினியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளம் பாலிவுட் நடிகர்!

தர்பாரில் ரஜினியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளம் பாலிவுட் நடிகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 23-ம் தேதி முதல் தர்பார் பட சூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததை தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளம் பாலிவுட் நடிகர் ஜதின் சர்னா தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய உணர்வுகளை விவரிக்க இப்போது வார்த்தைகள் குறைவு. இன்னொரு சமயத்தில் நான் நிச்சயம் வெளிப்படுத்துவேன். ரஜினிகாந்த் வாழும் லெஜண்ட். காட் ஆஃப் ஸ்டைல் எனவும் கூறியுள்ளார்.

தர்பார் படத்தில் இவருக்கும் ரஜினிக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Read More about :

share