Kollywood News

  • Home/
  • Cine News/
  • கன்னட தேசத்து கனவுக் கன்னி டயானா எரப்பா

கன்னட தேசத்து கனவுக் கன்னி டயானா எரப்பா

கர்நாடக மாநிலம் கூர்க்தான் என்னோட சொந்த ஊர். 2011ல மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களில் டாப்-10ல் நானும் இருந்தேன். தொடர்ந்து அழகிப் போட்டிகள், மாடலிங் ஷோன்னு பிசியா போயிட்டிருந்தேன். அப்போதான் என்னுடைய போட்டோக்களை மணிரத்னம் சார் பார்த்திருக்கிறார்” என தான் சினிமாவுக்கு வந்த கதை பற்றி சொல்ல ஆரம்பித்தார் பூரிக்கிறார் டயானா.

“முதல் படமே தமிழ் படமா இருக்கும்னு நினைச்சும் பார்க்கல. அதுவும் மணிரத்னம் சார் படம். அவர் படங்களை பார்த்து வளர்ந்த பொண்ணு நான். பம்பாய், ரோஜா படங்களை எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. திடீர்னு ஒரு நாள் மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸ்லேருந்து போன் வந்தது. யாரோ தமாஷ் பண்றாங்கன்னு தான் நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து ஆடிஷன் வச்சிட்டாங்க. பிறகு மணிரத்னம் சாரை பார்க்கணும்னு சொன்னதும் வானத்துல பறக்க ஆரம்பிச்சேன்.

கதை, என்னோட ரோல் எதுவும் தெரியாது. மணி சார் படத்துல நடிச்சாலே போதும்னு எல்லோரும் தவம் கிடக்கும்போது அதையெல்லாம் கேட்போமா என்ன? பிறகுதான் தெரிஞ்சது நானும் லீட் ரோல்னு. ஷூட்டிங்கிற்கு முன்னாடி ஒர்க்‌ஷாப் இருந்துச்சு. 7 நாள் டயலாக், என்னோட காட்சிக்கான ஒத்திகையெல்லாம் பார்த்து பக்காவா தயார் ஆயிட்டேன். ஒவ்வொரு வசனத்தையும் எப்படி உச்சரிக்கணும், எப்படி பாடிலாங்குவேஜ் இருக்கணும், ஃபேஸ் ரியாக்‌ஷன் எந்த மாதிரி தரணும்னு மணிசார் ஒரு டீச்சர் மாதிரி பாடம் எடுத்தாரு. சிம்பு ஜோடியா நடிக்கிற சாயாங்கிற  பொண்ணு ரொம்பவே மாடர்ன் அதே சமயம் ரொம்பவே அப்பாவியான பொண்ணு. பெரிய ரோல் கிடையாது. ஆனா ரொம்பவே கியூட்டான கேரக்டர்” என்று மூச்சுவிடாமல் பேசிய டயானா, கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

“படிக்கும்போது ஸ்போர்ட்ஸ் தான் என்னோட மூச்சு. மாடலிங்கிற்கு வந்த பிறகும் விளையாட்டை விடல. இப்போவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாட போயிடுவேன். சினிமால வரணும்னுதான் என்னுடைய ஆசையா இருந்துச்சு. முதல் படமே இவ்வளவு பெரிய படமா அமையும்னு நினைச்சும் பார்க்கல. மாடலிங்ல இருக்கிறதால மும்பையே கதின்னு கிடக்கிறேன். அதுக்காக பாலிவுட் கனவுன்னு சொல்லிட முடியாது. எந்த மொழி படமா இருந்தாலும் நடிப்பேன்” என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.

share