Kollywood News

  • Home/
  • Cine News/
  • தெலுங்கு படத்தில் நடிக்கும் திவ்யதர்ஷினி:

தெலுங்கு படத்தில் நடிக்கும் திவ்யதர்ஷினி:

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இருபது ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி, 

இவர் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்தவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துவருகிறார்.

டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்த படத்தில் ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்க, சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார்.  இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது.

இந்தத் தகவலை டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார். 'டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது' என்று சார்மி தெரிவித்துள்ளார்.

share