Kollywood News

  • Home/
  • Cine News/
  • அந்த நடிகை எனக்கு தங்கை மாதிரி! விழா மேடையிலேயே ஓப்பனாக கூறிய விஜய்

அந்த நடிகை எனக்கு தங்கை மாதிரி! விழா மேடையிலேயே ஓப்பனாக கூறிய விஜய்

அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் திருமணம் பற்றிய பேச்சு கிளம்பியுள்ள இந்த நேரத்தில் விஜய் தேவரகொண்டா நிஹாரிகா நடித்த சூர்யகாந்தம் பட விழாவில் கலந்து கொண்டு படத்தை பார்த்து வெற்றி அடையச் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அவர் அன்பு கோரிக்கை விடுத்ததுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் நிஹாரிகா பற்றி பேசிய அவர், நாக பாபு சார் அமெரிக்காவில் உள்ளார். வருண் தேஜ், சரண் அண்ணாவும் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் ஒரு அண்ணனாக நிஹாரிகா பட விழாவில் கலந்து கொண்டுள்ளேன். கீத கோவிந்தம் படத்தில் நான் நாக பாபு சாரின் மகனாக நடித்தேன். அதில் இருந்து ஒரு அண்ணன்- தங்கை முறையில் எங்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றார் விஜய் தேவரகொண்டா.

Read More about :

share