Kollywood News

  • Home/
  • Cine News/
  • சத்தமில்லாமல் 125 குடும்பங்களுக்கு வாழ்வளித்த தனுஷ்!

சத்தமில்லாமல் 125 குடும்பங்களுக்கு வாழ்வளித்த தனுஷ்!


தனுஷ் தன்னுடைய விஐபி படத்தில் நடித்த சுப்பிரமணிய சிவா என்பவரின் ஆலோசனப்படி சுமார் 125 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவிருக்கிறார்.
 
தேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. அங்குதான் தனுஷின் குலதெய்வக் கோயில் இருக்கிறது.
 
125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்துவந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை மொத்த செலவும் தனுஷ் தானாம். இதற்காக மொத்தம் 80 லட்ச ரூபாய் செலவு செய்கிறார் தனுஷ். இந்தப் பணிகளை, இயக்குநர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார்.

Read More about :

share