Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷிற்கு வில்லனாக களம் இறங்குகிறார் ஹாலிவுட் நடிகர்...

தனுஷிற்கு வில்லனாக களம் இறங்குகிறார் ஹாலிவுட் நடிகர்...


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. மேலும் அவர்  கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ராஜ்கிரண் நடித்து வரும் 'பவர்பாண்டி' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

பவர் பாண்டி படத்தினை இயக்கியதும் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான பகுதி அமெரிக்காவில் படமாக்கப்படவிருக்கிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் Al Pacino நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது...

share