பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாரி 2’. இப்படப்பிடிப்பினை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இப்படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கிறது. இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.