Kollywood News

  • Home/
  • Cine News/
  • கொடி படத்தில் நடந்த குழப்பங்கள்.. விளக்கம் அளித்த லைக்கா!!

கொடி படத்தில் நடந்த குழப்பங்கள்.. விளக்கம் அளித்த லைக்கா!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது “கொடி”. துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு எப்போது என ஒன்றும் தெரியவில்லை. இந்நிலையில் படத்தின் வெளியிடும் உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தியினை லைக்கா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாங்கள் தற்போது ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு”, விஜய் ஆண்டனியின் “எமன்”, கமல்-ஸ்ருதிஹாசனின் ஒரு படம், ரஜினியின் 2.O ஆகிய படங்களை மட்டுமே நாங்கள் தயாரித்து வருகிறோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஆக தனுஷின் “கொடி” இன்னும் பிசினஸ் வரை செல்லவில்லை

share