Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’என்னுடைய தோல்விகளில் உடன் இருந்தவர் இவர் மட்டுமே’ - தனுஷ் நெகிழ்ச்சி..!!

’என்னுடைய தோல்விகளில் உடன் இருந்தவர் இவர் மட்டுமே’ - தனுஷ் நெகிழ்ச்சி..!!



சென்னையில் இன்று தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கொடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் கூறியதாவது,


’இதுவரை நான் நடித்த திரைப்படங்களான “ புதுப்பேட்டை “ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி.

நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். இப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம். இப்படத்தின் கதை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும் , பிடிக்கும். இப்படத்தில்
8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியமான திரைப்படமாக இருக்கும்.

பல நண்பர்கள் என்னுடன் சந்தோஷ காலத்தில் என்னுடன் இருந்திருக்கிறார்கள். என்னுடைய கஷ்டத்திலும், துன்பத்திலும், சந்தோஷத்திலும் என அனைத்திலும் என்னுடன், எனது சகோதரனாக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே.’ என்று கூறினார். 

Read More about :

share