Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.. அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்!!

தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.. அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்!!


மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசந்மீனாட்சி தம்பதியினர் தனுஷ் தங்கள் மகன் தான் என்று கூறி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனுஷை மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டனர். அரசு மருத்துவர்களை கொண்டு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் அறிக்கை நேற்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதில், தனுஷின் அங்க அடையாளங்கள் அனைத்தும் உயர்தர லேசர் கருவிகளை கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், இவ்வழக்கின் விரிவான விசாரணை வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

share