Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’...

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’...


தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக வலம் வருபவர் ‘தனுஷ்’. கைவசம் நான்கு படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ் தொடர்ந்து 3 கதைகளிலும் நடிக்கவிருக்கிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னையில் நடித்து வரும் தனுஷ், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு பவர் பாண்டி என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஜான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். தனது வொண்டர் பார் மூலம் தனுஷே இந்த படத்தினை தயாரிக்கிறார். 

share