Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் அண்ணன் செல்வராகவனோடு கைகோர்க்கிறார் தனுஷ்...???

மீண்டும் அண்ணன் செல்வராகவனோடு கைகோர்க்கிறார் தனுஷ்...???



முதன் முதலாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர் தான் தனுஷ். இந்த படத்தினை அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கியிருந்தார். 

இதைத் தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றினர். தொடர்ந்து ஐந்தாவது முறையாக மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி என்னும் படத்தினையும் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார். இந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் நடிப்பார் என தெரிகிறது.

செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்னும் படத்தின் ப்ரொடக்‌ஷன் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார், இதனை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒரு படத்தினையும் இயக்கி முடித்ததும் தனுஷுடன் இணையவுள்ளார் செல்வராகவன்...

share