Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷையும் சிவகார்த்திகேயனையும் இணைக்கும் மேடை...

தனுஷையும் சிவகார்த்திகேயனையும் இணைக்கும் மேடை...



தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அதன் பின் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமோ அல்லது ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பதோ என எந்தவொரு செய்தியும் வரவில்லை.

இந்நிலையில் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் சுதீப் நடிப்பில் உருவாகி வரும் முடிஞ்சா இவன புடி படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது.

இதற்காக சிறப்பு அழைப்பாளர்களாக தனுஷ் , சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருக்கிறார்கள். பல மாதங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இந்த மேடை ஏறவிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் டி இமான். நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார்... வரும் புதன் அன்று இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது..

share