Kollywood News

  • Home/
  • Cine News/
  • மூன்று கதாநாயகிகளோடு கைகோர்க்கும் தனுஷ்..??

மூன்று கதாநாயகிகளோடு கைகோர்க்கும் தனுஷ்..??


தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை முடித்த கையோடு செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தனுஷ் கதை எழுதி வருகிறார். படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என டைட்டில் வைத்துள்ளனர். 

இதில் தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் ஒரு கதாநாயகி இந்த படத்தில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பினை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது...

share