Kollywood News

  • Home/
  • Cine News/
  • என்னை புகழும் போது எனக்கு கூச்சமாக இருந்தது - தனுஷ்..!!

என்னை புகழும் போது எனக்கு கூச்சமாக இருந்தது - தனுஷ்..!!



இன்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தொடரி படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இமான். இயக்கியிருக்கிறார் பிரபு சாலமோன். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த விழாவிற்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் வந்திருந்தனர். வந்த விருந்தினர்கள் அனைவரும் தனுஷை சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என புகழ்ந்து தள்ளி விட்டனர்.

அதன் பிறகு கடைசியாக மேடை ஏறி பேசிய தனுஷ், “ இங்கு என்னை தகுதிக்கு மீறி அதிகமாக பாராட்டி விட்டார்கள், அவர்களின் அன்பிற்கு நன்றி, ஆனால் ஒரு கட்டத்தில் இதை கேட்கும் போது எனக்கு கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது” என கூறினார்.

தற்போது சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என தனுஷ் புகழப்பட்டதால் நெட்டிசன்கள் தங்களது பணிகளை தற்போது தொடங்கி விட்டனர். 

Read More about :

share