Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் தனுஷின் ‘தொடரி’.!!

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் தனுஷின் ‘தொடரி’.!!



தங்கமகன் படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி என்னும் படத்தில் நடித்தார் தனுஷ். இதைத் தொடர்ந்து கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

தங்கமகன் வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், அதன் பிறகு ஒரு படம் கூட வெளிவரவில்லை என்பதால் மிகுந்த சோர்வில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். செப்டம்பர் 2 ஆம் தேதி தொடரி நிச்சயமாக வெளிவரும் என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏனென்றால், விநியோகஸ்தரர்களுக்கும் தயாரிப்பாளருக்குமான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாததால் மீண்டும் தள்ளிப்போகிறது தொடரி. மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி வெளிவரும் என நம்பத்தகுந்த சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

share