Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷின் படத்திற்கு ஏன் இந்த சோதனை ??

தனுஷின் படத்திற்கு ஏன் இந்த சோதனை ??


தங்கமகன் படத்தின் சிறிய சறுக்களுக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமனோடு கைகோர்த்திருக்கிறார் தனுஷ். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படத்தின் டீசர், இசை என எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

படத்திற்கு தொடரி என டைட்டில் வைத்துள்ளனர். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முழுப்படத்தினையும் தொடர் வண்டியில் வைத்தே முடித்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். இந்த படத்தினையும் முடித்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கொடி படத்தினையும் நடித்து முடித்து விட்டார் தனுஷ்.

தற்போது கொளதம் மேனன் இயக்கத்தில் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடைசியாக தனுஷின் படம் வெளிவந்து 6 மாதங்கள் ஆகி விட்டன.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடரி படத்தின் பாடல்கள் வெளிவரும் என தெரிகிறது..

share