Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..!!

’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..!!


கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்தது ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்தது ஆண்டவன் கட்டளை. இந்த இரு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியதாவது, ‘ கடந்த வாரம் வெளியான தொடரி மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய இரு படங்களின் திருட்டு விசிடிக்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல இணையதளங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

படம் வெளியான சில மணி நேரத்தில் இப்படம் இணையதளத்தில் வெளியாகி பதிவிறக்கம் செய்கின்றனர். ஆன்லைனில் வெளியாவதை தொழில்நுட்பங்களின் உதவியோடு முற்றிலும் தடுக்க வேண்டும். இந்த இரு படங்கள் மட்டுமல்லாது இனி வரும் அனைத்து படங்களுக்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து திருட்டு விசிடிக்கள் பரவாமல் தடுக்க வேண்டும்’ என அம்மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை பேரணியாக எடுத்து வந்து காவல் துறை அதிகாரியிடம் கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். இந்த செய்தியை அறிந்த தனுஷ், விஜய் ரசிகர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் திருட்டு விசிடிக்கு எதிராக களம் காண வேண்டும் எனவும் விஷால் அழைப்பு விடுத்துள்ளார்..

share