Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரே நாளில் நேருக்கு நேராக மோதும் தனுஷ்-விஜய் சேதுபதி...

ஒரே நாளில் நேருக்கு நேராக மோதும் தனுஷ்-விஜய் சேதுபதி...



தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ‘தொடரி’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றது.

படம் வெளிவரும் தேதி மட்டும் இன்னும் முடிவடையாமல் தள்ளி தள்ளி செல்கிறது. அநேகமாக வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே தேதியில் காக்கா முட்டை படத்தினை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியும், இவருக்கு ஜோடியாக இறுதிசுற்று நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இரு பெரும் நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் திரையரங்குகளுள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

share