வெப் தொடரை துவங்க காத்திருக்கும் தனுஷ்!


சமீபத்தில் வெப் சீரீஸ் எனப்படும் இணைய திரைப்படங்கள் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாரி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் ‘As I'm Sufferong From Kadhal' என்னும் தொடரை வெளியிட்டு அனைவரிடமும் நல்ல ஒரு பாராட்டினை பெற்றார்.


இந்நிலையில் இயக்குனர்  கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்ட்யின்மெண்ட் தயாரிப்பில் 'வீக் எண்ட் மச்சான்' எனும் புது வெப் சீரீஸ் உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் இந்த வெப் சீரீஸ் தொடரை துவங்க திட்டமிட்டிருக்கிறாராம். இது குறித்து அவர் பேசும் போது, 'இந்த வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது. அதை செயல்படுத்த ஆப் ஒன்றினையும் உருவாக்க திட்டமிட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் விஐபி-2 பட வேலைகளில் பிஸியாக இருந்துவிட்டால் இதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. அப்படியே இது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. மீண்டும் அதைக் கையில் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். நிச்சயம் அடுத்த வருடம் அது செயல்படுத்தப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்

share