Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷ் இயக்கும் 2வது படத்திற்கான பணிகள் ஆரம்பம்

தனுஷ் இயக்கும் 2வது படத்திற்கான பணிகள் ஆரம்பம்

‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அடுத்ததாக நடிப்பில் கவனம் செலுத்தினார்.

இப்படம் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற நிலையில் தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது. 

‘பவர் பாண்டி’ படம் ரிலீஸானபோதே அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், ‘பாகுபலி’ போல வரலாற்றுப் படமாக அது இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பைனான்ஸ் பிரச்சினையில் இருப்பதால், படம் திட்டமிட்டபடி தொடங்காது என்றும் கூறப்பட்டது.

தற்போது தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்திற்கான பணிகள் வியாழன் கிழமை நடைபெற்றது.

மேலும், நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார்.

Read More about :

share