Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் தர்பார் படத்துடன் இந்த பிரமாண்டமான படம் போட்டியா? சூப்பரான செய்தி இதோ

ரஜினியின் தர்பார் படத்துடன் இந்த பிரமாண்டமான படம் போட்டியா? சூப்பரான செய்தி இதோ

தெலுங்கில் பாகுபலி இரு பாகங்களை தொடர்ந்து பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், நயன்தாரா என ஒரு சினிமா பட்டாளமே நடித்து வரும் இப்படத்தை நடிகர் ராம்சரண் தயாரித்து வருகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான இப்படம் VFX வேலைகளின் தாமதத்தால் இந்த ஆண்டும் வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படம் வெளிவரவுள்ளதால் அன்றைய தினம் இரு சூப்பர் ஸ்டார்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என கூறலாம்.

share