Kollywood News

  • Home/
  • Cine News/
  • முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படக்குழுவின் மாஸ் பிளான்!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படக்குழுவின் மாஸ் பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் தொடங்கியது. படபூஜையும் சிறப்பாக நடத்தப்பட்டது.

ரஜினியின் 167 படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம். மேலும் அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் பாடலாசிரியராக இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக பிரபல நடிகர் பிரதிக் பாபர் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது மும்பையில் 3 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More about :

share