Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதியின் ’தர்மதுரை’க்கு அடித்தது ஜாக்பாட்...!!

விஜய்சேதுபதியின் ’தர்மதுரை’க்கு அடித்தது ஜாக்பாட்...!!



சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளிவந்தது ‘தர்மதுரை’. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 கோடி வரை வசூலை வாரிக் குவித்துள்ளது இப்படம்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.  இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இப்படத்தினை ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் இயக்கிய சீனு ராமசாமியே ஹிந்தியிலும் இப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

share