Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”ஒரு படத்தின் உண்மையான வெற்றி இது தான்” - தர்மதுரையால் இணைந்த குடும்பம்..!!

”ஒரு படத்தின் உண்மையான வெற்றி இது தான்” - தர்மதுரையால் இணைந்த குடும்பம்..!!



சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘தர்மதுரை’. திரையிட்ட இடங்களில் எல்லாம் அநேக வரவேற்பு கிடைத்ததையொட்டி படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திருநங்கை ஸ்நேகா நடித்திருந்தார்.  இவர் 13 வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டாராம். சினிமாவில் சேரும் எண்ணத்தோடு தான் சென்னைக்கு வந்தாராம். மிகவும் கஷ்டப்பட்டு நடிகைகளின் ஒப்பனை கலைஞராக பணிபுரிந்துள்ளார்.

அதன்பிறகு விஜய் சேதுபதியின் மூலமாக ‘தர்மதுரை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தினை பார்த்த பிறகு இவரது குடும்பத்தினர் சுமார் பத்து வருடத்திற்கு பிறகு இவரை காண சென்னை வந்துள்ளனர். இந்த செய்தியை மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்நேகா.

ஒரு படத்தின் வெற்றி இதன் மூலமாகவும் கூட வெளிப்படுகிறது..

share