Kollywood News

  • Home/
  • Cine News/
  • தயாநிதி அழகிரி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

தயாநிதி அழகிரி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி. சூர்யா நடித்த வாரணம் படத்தின் மூலம் சினிமாவில் விநியோகஸ்தாரக அறிமுகமானவர் இவர் பல படங்களை விநியோகித்து வந்தார்.

மேலும் சிம்பு நடித்த வானம் படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் அஜித் நடித்த மங்காத்தா படம் என சில முக்கிய படங்களையும் தயாரித்துள்ளார்.

கடைசியாக அவர் ஜெய் நடித்த வடகறி படத்தை தயாரித்திருந்தார். மதுரையில் கிரானைட் குவாரி மலையில் முறைகேடாக கிரானைட் வெட்டி கடத்தியதாக துரை தயாநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணையில் துரை தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள அவரின் 25 அசையும், அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது.

மதுரையில் அமைந்துள்ள அலுவலகம், கார்கள் மற்றும் சொகுசு பங்களா உள்ளிட்ட பல சொத்துகள் இதில் அடக்கமாம். முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பும் ரூ 40 கோடியாம். இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More about :

share