Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா இயக்குனரின் அடுத்த படம்

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படம்

நயன்தாரா நடித்த அறம் படம் மூலம் தனது இயக்கத் திறமையை உலக சினிமாவிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் இயக்குனர் கோபி நயினார். தற்போது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் வேலைகள் பிஸியாக சென்று கொண்டிருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளையும் கையில் எடுத்துள்ளார்.

பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாகக்கும் முயற்சியில் இயக்குனர் கோபி நயினார் ஈடுபட்டுள்ளார்.

25 வயது வரைக்குமே உயிரோடு வாழ்ந்த இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை இம்மண்ணில் இருந்து விரட்ட மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டியவர்.

இவரது கதையை மையமாக வைத்து தான் இயக்குனர் கோபி நயினார் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம்.

Read More about :

share