Kollywood News

  • Home/
  • Cine News/
  • கீ படம் எதற்கு பார்க்க வேண்டும்? இயக்குனர் விளக்கம்:

கீ படம் எதற்கு பார்க்க வேண்டும்? இயக்குனர் விளக்கம்:

ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்திருக்கும் படம் 'கீ'. அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக 'கீ' உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசும். 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நிலையில் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார். 

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி 'கீ' படம் திரைக்கு வருகிறது.

Read More about :

share