Kollywood News

  • Home/
  • Cine News/
  • மறைந்தது பகுத்தறிவுச் சூரியன்

மறைந்தது பகுத்தறிவுச் சூரியன்

கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிலேயே அனைத்து மருத்துவ உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கடந்த வியாழக்கிழமை கருணாநிதியின் உடல்நலம் குறித்து கோபாலபுரம் சென்று, நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி.

கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக இன்று மாலாை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மாலை 6.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

Read More about :

share