Kollywood News

  • Home/
  • Cine News/
  • துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் வில்லன் இவர்தான்:

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் வில்லன் இவர்தான்:

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'அசுரன்'. இந்தத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இந்த நிலையில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற படங்களை இயக்கியவர் துரைசெந்தில்குமார். இவர் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 34வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தனுஷ் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது.

share