Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழகம் எங்கும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தமிழகம் எங்கும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தமிழகத்தில் தேர்தல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் தமிழகம் எங்கும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஆணையத்தின் செயல்பாடுகளாக அவர் குறிப்பிட்டது:
 

தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ரூ 127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ 37.78 கோடி வருமான வரித்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ 284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ 127.66 கோடியில், ரூ 62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

Read More about :

share