Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷோடு கைகோர்க்கும் ஏ ஆர் ரகுமான்..!!

தனுஷோடு கைகோர்க்கும் ஏ ஆர் ரகுமான்..!!

கொடி படத்தினை முடித்த கையோடு அடுத்த நாளே கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்தார் தனுஷ். படத்திற்கு என்னை நோக்கி பாயும் தோட்டா என பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது. அனிருத் அல்லது ஹரீஸ் ஜெயராஜ் இருவரில் ஒருவர் ஒப்பந்தமாவார்கள் என கூறப்பட்டது.

ஆனால் இருவரின் கையிலும் படங்கள் சற்று அதிகமாகவே உள்ளதால் இந்த படத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்துவிட்டது. இதனால்    ஏ ஆர் ரகுமான் பக்கம் தனது தலையை திருப்பியிருக்கிறார் இயக்குனர். அநேகமாக ஏ ஆர் ரகுமான் இறுதி செய்யப்பட்டுவிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. கடைசியாக தனுஷ் நடிப்பில் உருவான மரியான் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

share