Kollywood News

  • Home/
  • Cine News/
  • என்னை நோக்கி பாயும் தோட்டா அறிவிப்பு

என்னை நோக்கி பாயும் தோட்டா அறிவிப்பு

                 இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆகின்றது. தயாரிப்பு நிர்வாகத்தில் சில சலசலப்பு இருந்ததால் படம் கிடப்பில் இருந்தது. இது தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கே மிகுந்த வருத்தமாகவும் படம் வெளியாகும் நாளையும் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் ட்விட்டரில் இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் சென்சார் வேலைகள் முடிவடையும் என்று ட்வீட் செய்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.


                என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தர்புக சிவா பணிபுரிந்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் என கெளதம் மேனன் கூறியுள்ளார்.

Read More about :

share