Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'விஸ்வாசம்' படத்தில் அஜித் உபயோகப்படுத்தின பைக்கின் விலை  தெரியுமா?

'விஸ்வாசம்' படத்தில் அஜித் உபயோகப்படுத்தின பைக்கின் விலை  தெரியுமா?

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் படம் 'விஸ்வசம்'. அதில் அஜித் டூயல் ரோலில் நடிக்கிறார் என்பது இதன் ஸ்பெஷல். மேலும், இப்படத்தில் அஜித் கூடவே ஒரு பைக் வருகிறதாம். அந்தப் பைக் யாருடையது என்று தேடியபோது, அப்படத்தின் எக்ஸுக்யூட்டிவ் புரொயூசர் ராகுல் என்பவருடையதுதான் என்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.

"ஆமாங்க. 'விஸ்வாசம்' படத்துல அஜித் சாருக்கு ஒரு பைக் தேவைப்பட்டது. நான் புரொடக்ஷன்ல இருக்கிறதுனால எங்க டீம்கிட்டதான் என்ன தேவைப்பட்டாலும் முதல்ல சொல்லுங்க. என் பைக்கே இருக்கு, அதை எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டேன். அதை அஜித் சாருக்கு தகுந்த மாதரி ரெடி பண்ணி இப்போ புது மாப்பிளை மாதரி இருக்கு. அஜித் சர் கூடவே படத்துல வருது. இந்த நியூஸ் எப்படி வெளிய தெரிஞ்சிதுனு தெரியல. நிறையபேர் எனக்கு போன் பண்ணி பைக்கை வேளைக்குக் கேட்டுகிட்டே இருகாங்க. அவங்க சொல்ற விலை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு. ஆனா, எனக்கு அந்தப் பைக்கை யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை. காரணம், நான் செனிமாவில சம்பாதிச்சு வாங்குன முதல் பைக் இது கிடத்திட்ட பதினைஞ்சு வருடமா என்கிட்ட இருக்கு.

Read More about :

share