சிவகார்த்திகேயனின் வில்லன், இப்போ விஜய் சேதுபதிக்கும் வில்லனா?மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில், மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கும் அவர்தான் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள்.

 ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘அநீதி கதைகள்’. விஜய் சேதுபதி, சமந்தா இருவரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் ஃபஹத் ஃபாசில் என்கிறார்கள். ஒரு ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், ஃபஹத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களே ஷூட்டிங் பாக்கியிருக்கிறது. 

இப்படி அடுத்தடுத்து ஃபஹத் வில்லனாக நடிப்பது, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. 

share